தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட கோவில்கள்: முதல் நாளிலேயே குவிந்த பக்தர்கள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோவில்கள் திறக்கப்படாததை அடுத்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5 மணிக்கே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், கோவிலுக்குள் நுழையும் முன்
 

தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட கோவில்கள்: முதல் நாளிலேயே குவிந்த பக்தர்கள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோவில்கள் திறக்கப்படாததை அடுத்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5 மணிக்கே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், கோவிலுக்குள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் ஒரே நேரத்தில் கோவில்களில் 20 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோவிலின் உள்ளே பக்தர்கள் கண்டிப்பாக 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அர்ச்சனை பொருட்களுக்கு அனுமதி இல்லை என்றும் அங்கப்பிரதட்சிணம் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டாம் என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் நாளொன்றுக்கு 7 அல்லது 8 முறை கோவில்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்பட அனைத்து மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

From around the web