கோவில் உண்டியல் வருமானம் ஏழை இந்து பெண்களின் திருமணத்திற்கு மட்டுமே: முதல்வர் எடியூரப்பா

பிற மதத்தின் ஆலயங்களில் வரும் வருமானங்கள் அந்தந்த மதத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே செலவழிக்கப்பட்டு வரும் நிலையில் இந்துமத கோவில்களில் இருந்து வரும் வருமானம் மட்டும் அரசு எடுத்துக் கொண்டிருப்பது குறித்து ஏற்கனவே ஹிந்து ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர் 

இந்துமத கோவில்களில் இருந்து வரும் உண்டியல் போன்ற வருமானம் இந்து மக்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்ற குரல் கடந்த சில வருடங்களாக மேலோங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா இதுகுறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் இந்து கோவில் உண்டியலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை ஏழை இந்து பெண்களின் திருமணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த தகவலை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த பதிவிற்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web