ஆந்திரா தெலுங்கானா எல்லையில் பயங்கர வெடி விபத்து: விரையும் முதல்வர்கள்

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் உள்ள நீர்மின் நிலையத்தில் திடிரென ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலம் அணையில் நீர் மின் நிலையத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீர் மின் நிலையத்தின் நான்காவது அலகு
 
ஆந்திரா தெலுங்கானா எல்லையில் பயங்கர வெடி விபத்து: விரையும் முதல்வர்கள்

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தின் எல்லையில் உள்ள நீர்மின் நிலையத்தில் திடிரென ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலம் அணையில் நீர் மின் நிலையத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீர் மின் நிலையத்தின் நான்காவது அலகு முனையத்தில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது

இந்த வெடிவிபத்தில் நீர்மின் நிலையத்தில் இருந்த 8 ஊழியர்கள் சிக்கிக் கொண்டதாகவும் அவர்களை மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் 9 பேர் உள்ளே சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக இருப்பதாகவும் தெரிகிறது

இந்த ஸ்ரீ சைலம் அணை ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளிப்படும் புகை அதிகமாக இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் மீட்புப்பணி வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web