என்னப்பா சொல்றீங்க 8848 பேருக்கு இந்த நோய் பாதிப்பா?இந்த ஆண்டும் இந்திய அவ்வளவுதானா?

நாடு முழுவதும் 8848 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு என தகவல்!
 
blackfuncus

தற்போது நம் நாட்டில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா வைரஸ் காணப்படுகிறது. இதனால் கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் மிகவும் திணறுகிறது. காரணம் என்னவெனில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் உள்ளதாக அதிகரித்து மட்டுமின்றி அவை வேகமாக பரவுகிறது. இதனால் நாட்டு மக்களே மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் பல மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் வாழ்வாதாரங்களையும் இழக்கின்றனர்.black fungus

இத்தகைய கொரோனா மத்தியில் மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான நோய் ஒன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அந்த நோய்க்கு கருப்பு பூஞ்சை என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது பெரும்பாலும் இந்த நோய் கண்களையே மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது .அதுவும் குறிப்பாக நோயிலிருந்து மீண்டவர்களை இந்த நோய் மிகவும் பாதிக்கிறது என்றும் ஆய்வுகள் அடிப்படையில் கூறபடுகிறது. இந்நிலையில் இந்த நோயின் தாக்கமும் தற்போது இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதன்படி இந்தியாவில் நாடு முழுவதும் 8848 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகள் ஒவ்வொன்றும் மாநிலம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் இந்த கருப்பு பூஞ்சை நோயானது சற்று அதிகமாக உள்ளதாகவும் ஆய்வின் அடிப்படையில் கூறப்படுகிறது.

From around the web