என்னப்பா சொல்றீங்க ஒரு ஊசியோட விலை இவ்வளவா!ஆனாலும் வருமுன்னே வரவேற்பு!!

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலையானது ரூபாய் 995.40 காசுகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது!
 
என்னப்பா சொல்றீங்க ஒரு ஊசியோட விலை இவ்வளவா!ஆனாலும் வருமுன்னே வரவேற்பு!!

தற்போது நாடெங்கும் கொரோனா எங்கு பார்த்தாலும் இருக்கிறது. இதனால் மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர். அதை விட அதிகமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது இதனை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகள் போன்றவைகள் ஒவ்வொரு மாநில அரசாலும் பிறப்பிக்கப்படுகிறது. எனினும் கொரோனாநோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இந்தியாவானது இரண்டு விதமான தடுப்பூசிகளை உபயோகித்து வருகிறது மேலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துகின்றனர்.sputnik v

ஆயினும் இந்த தடுப்பூசிகள் ஆனது பல பகுதிகளில் பற்றாக்குறை அதிகமாக நிலவுகிறது. இந்நிலையில் இந்தியாவானது தனது நட்பு நாடான வல்லரசு நாடுகள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள ரஷ்யாவிடம் உதவி கோரியது. மேலும் ரஷ்யாவிடமிருந்து சுற்றி என்ற ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும் இந்தியா இறக்குமதி செய்த நிலையில் அந்த தடுப்பூசி விலையானது தற்போது விண்ணை எட்டும் அளவிற்கு  காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் அந்த தடுப்பூசி ஒன்றின் மதிப்பானது 995.40 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

தடுப்பூசியின் விலையானது 948 ரூபாயுடன் 5% ஜிஎஸ்டி வரி சேர்த்து விற்பனையில் 995.40 காசுகளாக விற்கப்படுகிறது. மேலும் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி விற்பனைக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியவுடன் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் டாக்டர் ரெட்டிஸ் லேப் கூறியுள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசி இணையும் முதன்முதலாக ஐதராபாத்தில் உள்ள பயனாளிக்கு போடப்பட்டதாக கூறப்படுகிறது .அதிகாரபூர்வமாக அடுத்த வாரமே விற்பனைக்கு வரவுள்ள போதிலும் ஒரு பயனாளிக்கு தடுப்பூசி போடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web