நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்: முதலமைச்சர் அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பதும், சின்னத்திரை படப்பிடிப்பில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே ஆனால் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள சின்னத்திரை தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. மேலும் குறைந்தபட்சம் 50 பேர்களை படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று தற்போது 60 பேர் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என
 

நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்: முதலமைச்சர் அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பதும், சின்னத்திரை படப்பிடிப்பில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே

ஆனால் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள சின்னத்திரை தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. மேலும் குறைந்தபட்சம் 50 பேர்களை படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளரின் கோரிக்கையை ஏற்று தற்போது 60 பேர் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுமதித்துள்ளார்

நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அதிகபட்சமாக 60 பேர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் படப்பிடிப்பிற்கு அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் படப்பிடிப்பு நடத்த சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். இதனை அடுத்து வரும் திங்கள் முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

#

From around the web