ஹெலிகாப்டரின் திடீர் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதலமைச்சர்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறப்பட இருந்த ஹெலிகாப்டரில் திடீரென தீப்பிடித்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசுமுறை உள்ளூர் பயணம் செய்ய ஹெலிகாப்டரில் உட்கார்ந்திருந்தார். ஹெலிகாப்டர் கிளம்புவதற்கான பணியில் பைலட் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டரின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனை உடனடியாக கவனித்த அதிகாரிகள் உடனடியாக பைலட்டிடம் தகவல் கொடுத்தனர். உடனே ஹெலிகாப்டர் உள்ளே அமர்ந்திருந்த சந்திரசேகர ராவ் கீழே இறங்கினார். சரியான
 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறப்பட இருந்த ஹெலிகாப்டரில் திடீரென தீப்பிடித்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசுமுறை உள்ளூர் பயணம் செய்ய ஹெலிகாப்டரில் உட்கார்ந்திருந்தார். ஹெலிகாப்டர் கிளம்புவதற்கான பணியில் பைலட் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டரின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனை உடனடியாக கவனித்த அதிகாரிகள் உடனடியாக பைலட்டிடம் தகவல் கொடுத்தனர்.

உடனே ஹெலிகாப்டர் உள்ளே அமர்ந்திருந்த சந்திரசேகர ராவ் கீழே இறங்கினார். சரியான நேரத்தில் தீவிபத்தை கண்டுபிடித்ததால் முதல்வர் சந்திரசேகர ராவ் உயிர் தப்பினர். ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web