மாதிரி ஆன்லைன் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு: இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதில் சிக்கலா?

 

இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதற்கு முன்னதாக மாதிரி ஆன்லைன் தேர்வில் பங்கேற்ற 30 சதவீதம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரிவர தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது 

மாதிரி ஆன்லைன் தேர்வு போல் 24ஆம் தேதி தொடங்கும் செமஸ்டர் தேர்விலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து தங்கள் அச்சத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் 

எனவே மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாதிரி ஆன்லைன் தேர்வுகளை இன்னும் அதிக அளவில் நடத்திவிட்டு அதன் பின்னர் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது 

இந்த கோரிக்கை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web