உயிரோடு இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: யார் காரணம்?

 

பெரம்பலூரை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணுக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென வீரராகவன் பணி நிமித்தம் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் 

இதனை அடுத்து மாமனார் மாமியாருடன் இருக்க விருப்பம் இல்லாத ரோஷினி கடந்த சில மாதங்களாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ரோஷினியின் பெற்றோர் அவருக்கு கொடுத்த வரதட்சணை மற்றும் நகைகளை வீரராகவன் பெற்றோர்களிடம் கேட்டு வந்தனர் 

இந்த நிலையில் திடீரென பெரம்பலூர் பகுதியில் ரோஷினி இயற்கை எய்திவிட்டார் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை பார்த்து ரோஷினியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் தங்களது மகள் மீது உள்ள முன்விரோதம் காரணத்தினால் யாரோ மர்ம நபர்கள் சிலர் இந்த போஸ்டரை ஒட்டி இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்யும்படியும் அவர்கள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

உயிரோடு இருக்கும் ரோஷினிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web