புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழு: கனிமொழி கண்டனம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் உள்பட நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இந்த கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வதில் மத்திய அரசு மிக தீவிரமாக உள்ளது 

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பள்ளி கல்வி குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை படிப்படியாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது கவலை அளிப்பதாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை 2021-22 கல்வியாண்டு முதல் படிப்படியாக செயல்படுத்துவது என்ற மத்திய அரசின் முடிந்து கவலை அளிக்கிறது என்றும் பல்வேறு மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் பாராளுமன்றத்தின் விவாதம் நடத்த முன்னரே செயல்படுத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

From around the web