இருசக்கர வாகனத்தை பள்ளியாக மாற்றிய ஆசிரியர்: குவியும் பாராட்டுகள் 


 

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே 

இருப்பினும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட்போன், இணைய வசதி ஆகியவை இல்லாததால் ஆன்லைன் வகுப்பை கவனிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது 

இதனை அடுத்து சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு ஆசிரியர் தனது இரு சக்கர வாகனத்தை பள்ளியாக மாற்றியுள்ளார். இருசக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் ஒரு கரும்பலகையை பொருத்தி, அதை பள்ளி மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு ஓட்டி செல்கிறார்.

அங்கு மாணவர்களுக்குஇரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கரும்பலகையில் அவர் பாடம் சொல்லிக்கொடுக்கின்றார். இது குறித்து அவர் பேட்டியில் கூறியதாவது ’அனைத்து மாணவர்களாலும் பள்ளிக்கு வர முடியவில்லை. ஆன்லைன் படிப்புகள் படிப்பதற்கு தேவையான வசதிகளும் அவர்களிடம் இல்லை. எனவே நானே அவர்கள் இருக்குமிடம் சென்று கல்வி கற்று தருகிறேன்’ என்று கூறியுள்ளார் இதனை அடுத்து இந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web