50 ஆயிரம் கடன் கேட்ட டீக்கடைக்காரர்: 50 கோடி திருப்பி கேட்ட வங்கி!

டீக்கடைக்காரர் ஒருவர் வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் கேட்க சென்ற நிலையில் வங்கி நிர்வாகிகள் ஏற்கனவே வாங்கிய ரூ.50 கடனை திருப்பி உடனே கட்டுங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவை என்ற சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 4 மாதங்களாக அவர் கடை திரக்கவில்லை. இந்த நிலையில் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் டீக்கடை நடத்த 50 ஆயிரம்
 

50 ஆயிரம் கடன் கேட்ட டீக்கடைக்காரர்: 50 கோடி திருப்பி கேட்ட வங்கி!

டீக்கடைக்காரர் ஒருவர் வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் கேட்க சென்ற நிலையில் வங்கி நிர்வாகிகள் ஏற்கனவே வாங்கிய ரூ.50 கடனை திருப்பி உடனே கட்டுங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவை என்ற சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 4 மாதங்களாக அவர் கடை திரக்கவில்லை.

இந்த நிலையில் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் டீக்கடை நடத்த 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வங்கி ஒன்றில் விண்ணப்பம் செய்தார். அவரது பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், ஏற்கனவே அவர் அதே வங்கியில் 50 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் அந்த பணத்தை உடனே கட்டுங்கள் என்றும் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், தான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது என கூறியதை அடுத்து அதே பெயரில் உள்ள இன்னொருவர் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தது பின்னர் தெரிய வந்தது

From around the web