கொரோனா வைரஸ் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா/

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் தமிழக அரசு கேரள எல்லையில் உள்ள தியேட்டர்கள் மால்கள் மூட உத்தரவிட்டுள்ளதோடு, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கை இன்று விசாரணை செய்த
 
கொரோனா வைரஸ் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறதா/

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

அந்த வகையில் தமிழக அரசு கேரள எல்லையில் உள்ள தியேட்டர்கள் மால்கள் மூட உத்தரவிட்டுள்ளதோடு, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் இதுகுறித்து ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

From around the web