தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை திடீர் சரிவு: கொரோனாவால் திருந்திவிட்டார்களா குடிமகன்கள்?

கொரோனாவால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தாலும் வருமானத்தை கணக்கில் கொண்டு கடந்த சில நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிய பொதுமக்கள் தற்போது மதுவாங்க டாஸ்மாக் கடைக்கு செல்வதில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனால் டாஸ்மாக் விற்பனை கடும்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மதுபான விற்பனை வெகுவாக சரிந்திருப்பதாகவும் குறிப்பாக விஸ்கி, ரம் உள்ளிட்ட வகை மதுபானங்களின் விற்பனை 14 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும் டாஸ்மாக்
 

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை திடீர் சரிவு: கொரோனாவால் திருந்திவிட்டார்களா குடிமகன்கள்?

கொரோனாவால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தாலும் வருமானத்தை கணக்கில் கொண்டு கடந்த சில நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிய பொதுமக்கள் தற்போது மதுவாங்க டாஸ்மாக் கடைக்கு செல்வதில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனால் டாஸ்மாக் விற்பனை கடும்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மதுபான விற்பனை வெகுவாக சரிந்திருப்பதாகவும் குறிப்பாக விஸ்கி, ரம் உள்ளிட்ட வகை மதுபானங்களின் விற்பனை 14 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் பீர் விற்பனை 45% வரை குறைந்துள்ளது என்றும் இதனால் தினமும் 15 கோடி ரூபாய் அளவுக்கு பீர் விற்பனை சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது

ஊரடங்கால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாதது, மதுபானங்களின் விலை உயர்வு, பார் வசதி இல்லாதது ஆகியவை மதுபானங்களின் விற்பனை குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகிறது.

இருப்பினும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால், தமிழக அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் குடிமகன்களும் தற்போது பணத்தின் அருமையை புரிந்து கொண்டு குடிப்பதை நிறுத்தியும் குறைத்தும் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

From around the web