டாப்சி வாங்கி கொடுத்த ஐபோன்: பள்ளி மாணவி இன்ப அதிர்ச்சி

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாது பெற்றோர்கள் பலர் உள்ளனர் சமீபத்தில் பன்ருட்டி பகுதியில் உள்ள பெற்றோர்கள் செல்போன் வாங்கித் தராத ஆத்திரத்தில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயார் செய்து
 

டாப்சி வாங்கி கொடுத்த ஐபோன்: பள்ளி மாணவி இன்ப அதிர்ச்சி

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாது பெற்றோர்கள் பலர் உள்ளனர்

சமீபத்தில் பன்ருட்டி பகுதியில் உள்ள பெற்றோர்கள் செல்போன் வாங்கித் தராத ஆத்திரத்தில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார்

அவர் நீட் தேர்வுக்கு தயாராக செல்போன் தேவை என்ற நிலையில் அவரது பெற்றோர்களிடம் கேட்டுள்ளார் ஆனால் அவர்களால் செல்போன் வாங்கித் தர முடியவில்லை

இந்த நிலையில் இது குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதை அடுத்து நடிகை டாப்சி இதனை கேள்விப்பட்டு ஸ்மார்ட் போன் கூட வாங்க முடியாமல் இருந்த அந்த மாணவிக்கு ஐபோன் ஒன்றை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்

இது குறித்து அந்த மாணவி கூறியதாவது: டாப்சி மேடம் எனக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார். ஐபோன் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற்று அந்த வெற்றி டாப்சிக்கும் தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

From around the web