நிலநடுக்கத்தால் தவிக்கும் தாமிரபரணி மக்கள்!குறிப்பாக கடலோர கிராமங்கள்!

நெல்லை கடலோர கிராமங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது கூறப்படுகிறது!
 
நிலநடுக்கத்தால் தவிக்கும் தாமிரபரணி மக்கள்!குறிப்பாக கடலோர கிராமங்கள்!

தமிழகத்தில் வற்றாத நதி என்று அழைக்கப்படுவது தாமிரபரணி. தாமிரபரணி ஆனது தமிழகத்தின் எழில்மிகு நகரமான திருநெல்வேலியில் உள்ளது. இந்த தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் திருநெல்வேலி என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது அல்வாதான். மேலும் வீரத்திற்கும் பாசத்திற்கும் பேர்போன ஊர் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது. மேலும் இங்கு அதிகமான கல்லூரிகள் பள்ளிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.Tirunelveli

இத்தகைய வளமிக்க நகரமான திருநெல்வேலியில் சில தினமாக ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. திருநெல்வேலி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் கொரோனா அதிகமாக காணப்படுகிறது. கொரோனா எதிராக பல்வேறு மாவட்டங்களும் மாவட்டத்தில் உள்ள மக்களும் மிகவும் கடினமாக போராடுகின்றனர். ஆயினும் இன்னும் கொரோனா தாக்கமானது கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் திருநெல்வேலியில் கொரோனா நோயோடு மட்டுமின்றி நிலநடுக்கமும் அங்குள்ள மக்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களான கூடங்குளம் கூட்டப்புளி பெருமணல் கள்ளிக்குளம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது கூறப்படுகிறது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் தென் பகுதிகளான வள்ளியூர்  செட்டிகுளம் ஆகிய பகுதிகளிலும் பிற்பகல் 3.38 க்கு நில அதிர்வு உணரப்பட்டது கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் திருநெல்வேலியின் நட்பு மாவட்டமாக காணப்படும் குமரிலும் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம், திங்கள் சந்தை போன்ற பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web