ஜிகா வைரஸ் பாதிப்பு: கொசுக்களால் உருவாகும் வைரஸால் பொதுமக்கள் அச்சம்!

 
zika virus

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஜிகா வைரஸ் என்பது பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

கேரளாவில் இதுவரை 13 பேருக்கு ஜிகா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் உருவாகும் என்றும் இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் வலி, தசை மூட்டு வலி, தலைவலி, சோர்வு ஆகியவை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

கேரளாவில் முதல் முதலாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அதன்பின் தற்போது படிப்படியாக பரவி பதிமூன்று பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

From around the web