திமுக அமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த ஜக்கி வாசுதேவ்!

 
jakki

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவுக்கு ஜக்கி வாசுதேவ் திடீரென பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திமுகவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் கடந்த சில வருடங்களாகவே ஜக்கி வாசுதேவ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்று திடீரென பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜக்கிவாசுதேவ் குறித்து இனிமேல் பேசமாட்டேன் என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு ஜக்கிவாசுதேவ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது: 

அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்.


 

From around the web