இனி திருமணம் என கூறி பொய்யாக இபதிவு செய்ய முடியாது

 
e registration

திருமணத்துக்கு செல்வதாக கூறி ஏராளமானோர் இ-பதிவு செய்வதை அடுத்து தமிழக அரசு தற்போது புதிய நடைமுறை ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின் படி இனிமேல் பொய்யாக திருமணத்துக்கு செல்வதாக யாருமே பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

marriage


* திருமணத்திற்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் திருமணப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். 

* திருமண பத்திரிகையில் உள்ள அனைவரையும் இபதிவில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். 

* ஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒரு முறை மட்டுமே இ-பதிவு செய்ய முடியும் 

இந்த புதிய நடைமுறை அமலுக்குவருவதால் இனிமேல் யாரும் பொய்யாக திருமணத்திற்கு செல்வதாக இபதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web