பலத்த காற்றுடன் கரையை கடந்தது யாஸ் புயல்


 

 
yaas

வங்க கடலில் உருவான யாஸ் புயல் இன்று மதியம் 12 மணி முதல் ஒரு மணிக்குள் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் கரை கடந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது 

ஒரிசாவின் பாலசோர் என்ற பகுதி அருகே புயல் கரை கடந்தது என்றும், யாஸ் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் அலைகள் மிகப்பெரிய அளவில் ஆக்ரோஷமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது 

yaas

மேலும் புயல் கரையை கடந்த போது கனமழை பெய்தது என்றும், இதனால் அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் முழுவதுமாக புயல் கரை கடந்த உடன் உடனடியாக சேத மதிப்பு கணக்கிடப்பட்டு மீட்புப் பணிகள் தொடங்கப்படும் என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஏற்கனவே ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web