2 வயது குழந்தைகளுக்கு உலகிலேயே முதல்முறையாக தடுப்பூசி: இந்தியா அசத்தல்

 
vaccine

இரண்டு வயது குழந்தைகளுக்கு உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தடுப்பூசி செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் தற்போது குறைந்து வந்தாலும் விரைவில் மூன்றாவது அலை தாக்கலாம் என்று கூறப்படுகிறது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தயாராகி வருகிறது

ஏற்கனவே இரண்டு பெரிய நிறுவனங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டுபிடித்து அதற்கான சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐசிஎம்ஆர் தெரிவித்த தகவலின்படி உலகிலேயே இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது

2 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனை வெற்றி பெற்றால் வரும் அக்டோபர் மாதம் முதல் தற்போது செலுத்தப்படும் என்றும் மையம் தகவல் தெரிவித்துள்ளது

From around the web