மாலை 5 மணி நிலவரப்படி வெற்றி மற்றும் முன்னிலை நிலவரம்

 
மாலை 5 மணி நிலவரப்படி வெற்றி மற்றும் முன்னிலை நிலவரம்

தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலை பெற்று விட்டது. இந்த நிலையில் 5 மணி நிலவரப்படி கட்சிகளின் நிலவரம்:

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி. ராஜபாளையத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

துறைமுகம் தொகுதி12 வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளரை விட திமுக வேட்

தாராபுரம் தொகுதி 18வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் முருகனை விட திமுக வேட்பாளர் கயல்விழி 1,946 வாக்குகளில் வித்தியாசத்தில் முன்னிலை  

 மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதர்சனம் 23,353 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் மூர்த்தியை விட முன்னிலை

சோழிங்கநல்லூர் தொகுதி 16-வது சுற்றில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ் 10,857 வாக்குகள் வித்யாசத்தில் முன்னிலை 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

துறைமுகம் தொகுதியில் 15வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் சேகர் பாபு 25,967 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை

பெரம்பூர் தொகுதி 17 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 27,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

 திட்டக்குடி தொகுதியில் பாஜகவை வீழ்த்தி 20,929 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணேசன் வெற்றி 

எடப்பாடி தொகுதி 24வது சுற்றில் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 76,580 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் சேகர் பாபு 16,290 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை

குறிஞ்சிப்பாடி தொகுதியில் 21வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 11,488 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை விட முன்னிலை

ஆத்தூர் தொகுதி 19வது சுற்று முடிவில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர்  87,804 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் முன்னிலை!

திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் பொன்முடி வெற்றி 

From around the web