ஜூன் 3 முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தமா?

 
radhakrishnan

தமிழகத்தில் ஜூன் 3 முதல் ஜூன் 6 வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்துவதற்கு வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் இன்றும் நாளையும் மட்டுமே பொதுமக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசிகள் இருப்பதாகவும் அதனை அடுத்து மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடரும் என்றும் இல்லையேல் ஜூன் 3 முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஜூன் ஆறாம் தேதி தான் மத்திய அரசு தமிழகத்திற்கு தடுப்பூசி தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு ஏற்கனவே மே மாதம் கொடுக்க வேண்டிய 1.74 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி பாக்கி இருப்பதாகவும் ஜூன் மாதத்திற்கான 42.58 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் இன்னும் வர வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web