தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஊரடங்கா? அதிர்ச்சியில் தமிழக மக்கள்

 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து ஊரடங்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும், சென்னையில் 800க்கும் மேற்பட்டோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தேர்தலுக்குப்பின் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

lockdown

குறிப்பாக நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை மீண்டும் மூடப்படும் என்றும் அரசியல் சமூக நிகழ்ச்சிகள் மத நிகழ்ச்சிகள் வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறுவுறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது 

இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web