தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்படுமா?

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருவதை அடுத்து திரையரங்குகள் வழிபாட்டுத்தலங்கள் டாஸ்மாக் கடைகள் ஆகியவை மூட உத்தரவிட படுமா? என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரவி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் தேர்தல் முடிந்தவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது

theater

இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வரும்போது போல தமிழகத்திலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் குறிப்பாக டாஸ்மாக் கடைகள், திரையரங்குகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தர விட வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார் 

இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை அவர்கள் மூட நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web