இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டிற்காக இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் நடப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது 

ஏற்கனவே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கிடையாது என்று அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் அதை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது 

exam

இந்த நிலையில் பள்ளி இறுதித்தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். 2020-21 கல்வியாண்டுக்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு என்று அவர் கூறினார் 

ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web