சசிகலாவுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்பா?

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் நாளை மறுநாள் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சசிகலா வருகையை அடுத்து அமமுகவினர் மற்றும் அதிமுகவின் ஒரு சில நிர்வாகிகள் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள எல்லையில் இருந்து சென்னை வரும் வரை அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

sasikala

இந்த நிலையில் தற்போது சசிகலாவுக்கு வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க அமமுகவினர் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருடைய ஆதரவாளர்கள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டதாகவும் இந்த மனு குறித்த முடிவை மாவட்ட ஆட்சியர் விரைவில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கும் தகவல் அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web