ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் இன்று ஆலோசனை

 
stalin

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த வாரம் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீக்கப்படுமா? என்பது குறித்து ஆலோசனையில் தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஈடுபட்டுள்ளார். 

இந்த ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஜூலை 5ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிப்பது, கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பேருந்துகள் இயங்குகின்றன என்பதும் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிந்ததே. இந்த நிலையில் ஐந்தாம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோயில்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூடுதல் மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் கூடுதல் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திரையரங்குகள் திறப்பது குறித்தும் இந்த ஆலோசனையில் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கூடுதல் தளர்வுகளை முதல்வர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

From around the web