தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா? சிலமணி நேரங்களில் அறிவிப்பு!

 
practical exam

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி நேற்று சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய அதிகாரிகளுடன் பிளஸ் டூ தேர்வு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் இதனை அடுத்து பிளஸ் டூ தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

இந்தியா முழுவதும் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் அதனால் இன்றைய அறிவிப்பில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து என்ற அறிவிப்புதான் வெளிவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது எப்படி குறித்த ஆலோசனையும் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web