நாளை முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் இயங்குமா? அதிரடி அறிவிப்பு 

 
நாளை முழு ஊரடங்கின்போது அம்மா உணவகங்கள் இயங்குமா? அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடின்றி பரவி வருவதை அடுத்து திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முழு ஊரடங்கை அடுத்து எந்த கடைகளை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் ஆட்டோ பேருந்து உள்பட ஒரு சில வாகனங்கள் மட்டும் இயங்கும் என்றும் அத்தியாவசிய பணிக்கு மட்டும் மக்கள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் ஓட்டல்கள் மூடி இருக்கும் என்ற காரணத்தினால் பொதுமக்கள் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது 

amma

இருப்பினும் உணவு விற்பனை செய்பவர்களும் உணவை வாங்குபவர்களும் கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து இயங்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் நாளை அதிக அளவிலான உணவுகளை தயார் செய்யும்படியும் அனைத்து அம்மா உணவக பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web