பெட்ரோலை அடுத்து டீசலும் ரூ.100ஐ தொடுமா?

 
petrol

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டிவிட்ட நிலையில் டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது 

தமிழகத்தில் பெட்ரோல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்ததுள்ளது. இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.44 என விற்பனையாகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்ததுள்ளது. இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 93.91 என விற்பனையாகிறது.

From around the web