குஷ்பு கைது ஏன்? அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

 

இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை சிதம்பரத்தில் போராட்டம் நடத்த நடிகை குஷ்பு சென்னையிலிருந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது முட்டுக்காடு என்ற பகுதியில் போலிசாரால் தடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் குஷ்புவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினரும், குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர்களும், கேளம்பாக்கம் விடுதி முன் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்த நிலையில் குஷ்புவை கைது செய்தது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்றும் பாஜக மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

அதிமுக கூட்டணி கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் பாஜகவின் பிரமுகர் ஒருவரை அதிமுக அரசு கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web