தேர்தலை ஏன் தள்ளிவைக்ககூடாது?  பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

 
தேர்தலை ஏன் தள்ளிவைக்ககூடாது? பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரியில் ஏன் தேர்தலை தள்ளி வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுச்சேரியில் பாஜகவினர் ஆதார் ஆணையத்தின் உதவியால் வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று அவர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்பி வருவதாக புதுச்சேரியை சேர்ந்த அமைப்பு ஒன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது

court

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவுக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து கேள்வி எழுப்பியது. முறைகேடாக ஆதார் ஆணையம் மூலம் மொபைல் எண்கள் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் 

மேலும் பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் ஒத்தி வைக்க கூடாது என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்புயதோடு, இதுகுறித்து பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web