சசிகலா பொறுமை காப்பது ஏன்? பிரதமர் வருகை காரணம?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அதிரடியாக அவர் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து அதிமுகவை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் சென்னை வந்ததிலிருந்து அவர் அமைதியாக உள்ளார் என்பதும் இதுவரை அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பதும் அவரது தரப்பில் இருந்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
சசிகலா தொடர்ந்து மௌனம் காப்பதும், டிடிவி தினகரன் அடக்கி வாசிப்பதும் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருக்கும் நிலையில் அவர் வந்து சென்ற பின்னர் சசிகலா தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என அவரது வட்டாரங்கள் கூறுகின்றன
மேலும் தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளதால் தனிமைப்படுத்தப்படும் காலத்தில் இருப்பதாகவும் தனது உடல்நிலை சரியானதும் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது
மொத்தத்தில் சசிகலாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பரபரப்பில் அதிமுகவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது