டிக்கெட் புக் செய்த தமிழருக்கு இந்தியில் எஸ்.எம்.எஸ் அனுப்பியது ஏன்? ரயில்வே துறை விளக்கம்!

 

கடந்த சில மாதங்களாக இந்திக்கு எதிராக மீண்டும் போராட்டங்களை தொடங்கியுள்ள திமுக சமீபத்தில் தமிழர் ஒருவர் ரயில்வே டிக்கெட் புக் செய்த போது அவருக்கு இந்தியில் எஸ்எம்எஸ் வந்ததாக குற்றம் சாட்டியது

இது குறித்து காரசாரமாக திமுகவினர் குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார் என்பதும் அவரை அடுத்து கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி எம்பி உள்ளிட்டோர் சமூக வலைதளப் பக்கங்களில் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழர்கள் ரயில்வே டிக்கெட் புக் செய்யும் போது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தான் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றும் ஹிந்தியில் அனுப்பியது ஏன் என்றும் அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் ஐஆர்சிடிசி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது 

திமுகவினர் குறிப்பிடும் சம்மந்தப்பட்ட தமிழர் டிக்கெட் புக் செய்யும் போது அவர் தனது விருப்பத்திற்கு உரிய மொழி இந்தி என்று குறிப்பிட்டு இருந்தார் என்றும், அதனால் தான் அவருக்கு இந்தியில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது என்று விளக்கம் கூறியுள்ளது. டிக்கெட் புக் செய்தவர் தனக்கு ஹிந்தியில் எஸ்எம்எஸ் வேண்டும் என்றும் விருப்பப்பட்டதால் தான் அவருக்கு ஹிந்தியில் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது என்ற  உண்மை தெரியாமல் திமுகவினர் இந்திக்கு எதிராக திடீர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

From around the web