நாளை மறுநாள் முதல் எந்தெந்த கடைகள் மட்டும் திறக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

 
lockdown

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது இம்முறை கூடுதலாக ஊரடங்கு கடமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் முதல் எந்தெந்த கடைகள் மட்டும் திறந்து வைக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

* மருந்தகங்கள்‌, நாட்டு மருந்து கடைகள்‌, கால்நடை மருந்தகங்கள்‌

* பால்‌ விநியோகம்‌, குடிநீர்‌ மற்றும்‌ தினசரி பத்திரிக்கை விநியோகம்‌

* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள்‌, பழங்கள்‌, தோட்டக்கலைத்‌துறை மூலமாக சென்னை நகரத்திலும்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன்‌ இணைந்து வாகனங்கள்‌
மூலமாக வழங்கப்படும்‌

* தலைமைச்‌ செயலகத்திலும்‌, மாவட்டங்களிலும்‌, அத்தியாவசியத்‌ துறைகள்‌ மட்டும்‌ இயங்கும்‌

* தனியார்‌ நிறுவனங்கள்‌, வங்கிகள்‌, காப்பீட்டு நிறுவனங்கள்‌, தகவல்‌ தொழில்‌ நுட்ப நிறுவனங்கள்‌ போன்றவற்றில்‌ பணிபுரிவோர்‌, வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

* மின்னணு சேவை  காலை 08.00 மணி முதல்‌ மாலை 06.00 வரை இயங்கலாம்‌.

* உணவகங்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ 10.00 மணி வரையிலும்‌, நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ மதியம்‌ 3.00 மணி வரையிலும்‌, மாலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரையிலும்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது. 

* பெட்ரோல்‌, டீசல்‌ பங்க்குகள்‌ வழக்கம்‌ போல்‌ இயங்கும்‌

* ஏடி.எம்‌. மற்றும்‌ அவற்றிற்கான சேவைகள்‌ அனுமதிக்கப்படும்‌. வேளாண்‌ விளை பொருட்கள்‌ மற்றும்‌ இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌

* சரக்கு வாகனங்கள்‌ செல்லவும்‌, அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கொண்டு செல்லவும்‌ அனுமதிக்கப்படும்‌.

* உரிய மருத்துவக்‌ காரணங்கள்‌ மற்றும்‌ இறப்புகளுக்காக மட்டும்‌ உரிய மருத்துவக்‌ காரணங்கள்‌ மற்றும்‌ இறப்புகளுக்காக மட்டும்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌

* மருத்துவக்‌ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள்‌ பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

* செய்தி மற்றும்‌ ஊடக நிறுவனங்கள்‌ வழக்கம்‌ போல்‌ இயங்கலாம்‌.

*. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌, மருத்துவ உபகரணங்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌  

* மால்கள்‌ திறந்திட அனுமதி கிடையாது.

பொது மக்கள்‌ நலன்‌ கருதி, இன்று (22-5-202] இரவு 9-00 மணிவரையிலும்‌, நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள்‌ மட்டும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 மணி வரை அனைத்துக்‌
கடைகளும்‌ திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ நலன்‌ கருதி, இன்று (22.05.2027) மற்றும்‌ நாளை (23.05.2027) தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்துகள்‌ வெளியூர்‌ செல்வதற்கு அனுமதிக்கப்படும்‌.
 


 

From around the web