தமிழக  சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைவது எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் நிறைவடைகிறது என்றும் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்ய சமீபத்தில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் வரும் மே 24ம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் நிறைவடைகிறது என்றும் அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் 

sunil arora

மேலும் புதிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த சுனில் அரோரா, பெண்கள் முதியோர்கள் வாக்களிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார் 

மேலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்தார்

மேலும் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்க சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுகுறித்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

From around the web