தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஆலோசனை!

 
school

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஜூலை 16ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி இன்னும் திறக்கவில்லை என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் புதுவை, தெலுங்கானா உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆசிரியர் சங்கம், தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா என்பவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் ஆலோசனை செய்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த முறையான அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

மொத்தத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web