தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல்

 
school

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என சற்று முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை என்பதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஊரடங்கு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும் இந்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களின் வீட்டுக்குச் சென்று வழங்க ஏற்பாடு செய்வதா? அல்லது மாணவர்களை பள்ளிக்கு வரச்செல்வதாக என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்

கொரோனா இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் மூன்றாவது அலையும் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுவதால் பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

From around the web