ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது? அப்பல்லோவின் அறிக்கை!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

rajini

அதில் ரஜினிகாந்த் அவர்களின் ரத்த அழுத்த மாறுபாடு நேற்று இருந்ததைவிட இன்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை என்றும் அதே நேரத்தில் ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ரஜினியின் உடல்நிலை குறித்த அப்பல்லோ மருத்துவமனையின் இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

rajini

From around the web