டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்போது நடத்தப்படும்? டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே நடந்த 12ஆம் வகுப்பு தேர்வின் முடிவு எப்போது வரும் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் பல தேர்வுகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி
 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்போது நடத்தப்படும்? டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே நடந்த 12ஆம் வகுப்பு தேர்வின் முடிவு எப்போது வரும் என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில் நாடு முழுவதும் பல தேர்வுகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள் கூறியபோது, ‘கொரோனா பாதிப்புள்ள நிலையில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாது என்றும், கொரோனா குறித்த சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி உள்பட காலியான எந்த பணிகளுக்குமான தேர்வுகள் இன்னும் குறைந்தது ஒருசில மாதங்களுக்கு நடைபெறாது என்றே தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்களின் பணியிடங்கள் மட்டும் நிரப்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web