அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? கல்லூரி கல்வி இயக்ககம் 

 
college

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது என்பது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்டலாம் என்றும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரண்டிலும் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த ஆண்டு முதல் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிளஸ் டூ சான்றிதழ் உள்பட அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்த பின்னரே மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து பிளஸ் டூ முடித்த மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web