ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? சகோதரர் சத்யநாராயணா தகவல்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம் 

அப்பல்லோ மருத்துவமனை இதுவரை வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் ரஜினிகாந்தின் ரத்த அழுத்த மாறுபாடு குறைந்து வருவதாகவும் தற்போது அவர் அவரது ரத்த அழுத்தம் சீராக வருவதாகவும் அவரது டிஸ்சார்ஜ் குறித்து விரைவில் மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியிருந்தது

rajini brother

இந்த நிலையில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா அவர்கள் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்

மேலும் ரஜினியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web