11ஆம் வகுப்பை எப்பொழுது தொடங்கலாம்? வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

 
students

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான புதிய வகுப்புகள் எப்போது தொடங்கலாம் என்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது 
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்களை சேர்க்கலாம் என்றும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒரே பிரிவில் பல மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என்றும் மேலும் கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்பட்டு அந்த வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ஆம் வகுப்பு ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து தொடங்கலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

From around the web