பாலிடெக்னிக் கல்லூரியில் சேர தகுதி என்ன: தமிழக அரசின் அரசாணை!

 
polytechnic

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களின் தகுதி என்ன என்பது குறித்து அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரியில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தகுதியாக இதுவரை இருந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற வில்லை. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும் என்பதால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவது எப்படி என்ற குழப்பம் இருந்தது 

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் போதும் என அறிவித்து இருந்தது. இதனை அடுத்து தற்போது இது குறித்து அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ளது. 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் அவர்களது ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசாணையில் மேலும் கூறியிருப்பதாவது:
 

polytechnic

polytechnic

From around the web