விஜய்யுடன் பேசியது என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

தளபதிவிஜய் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் சந்திப்பு சமீபத்தில் நடந்தது என்பதை பார்த்தோம். முதல்வரின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்குகளையும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது., இந்த கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விஜய் சந்திப்பு குறித்து கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் திறக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு தான் ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது