புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன? தமிழக அரசு

 

பிரிட்டன் நாட்டில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் மனித இனமே அச்சுறுத்தல் உள்ளது என்பதும், மனித இனமே அச்சத்தில் உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவிவிட்டதாகவும், சுமார் இருபது பேர்களுக்கு அதிகமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவியவர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்ன என்பதை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வந்தவர்கள் காய்ச்சல் ஜலதோஷம் தொண்டை வலி நாவில் சுவையின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது 

corona

அதுமட்டுமின்றி சோர்வு பசியின்மை தலைவலி வயிற்றுப்போக்கு மனக்குழப்பம் தசை வலி தோல் அரிப்பு ஆகிய ஏழு அறிகுறிகளும் புதிய வகை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது 

புதிய வகை கொரோனா வைரஸ் முன்பைவிட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது

2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சோதித்த நிலையில் 2021 ஆம் ஆண்டிலாவது விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய வகை கொரோனா வைரசால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

From around the web