பள்ளிகளை மூட பொதுநல வழக்கு: நீதிமன்றம் அனுமதி!

 
court

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரம் ஆகியுள்ள நிலையில் பள்ளிகளை மூட பொதுநல வழக்கை தாக்கல் செய்யலாம் என நீதிபதி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் என்பவர் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை என்றும் வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இந்த நிலையில் மனுதாரர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை பொதுநல வழக்கு தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து மனுதாரர் இன்னும் ஓரிரு நாளில் மதுரை உயர்நீதிமன்றத்தில் பள்ளிகளை மூட பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web