சசிகலா அணிக்கு ஓபிஎஸ் வந்தால் வரவேற்போம்: டிடிவி தினகரன்

சசிகலா அணிக்கு ஓபிஎஸ் வந்தால் வரவேற்போம் என்று டிடிவி தினகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை நிறைவுபெற்று சென்னை திரும்பிய சசிகலா அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது அமைதியாக இருந்து அரசியல் சூழ்நிலைகளைக் கவனித்து வருகிறார்
இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் அவர் அரசியலில் குதித்து அதிரடியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்போம் என்றும் கூறினார். மேலும் சசிகலா அணிக்கு ஓபிஎஸ் வந்தால் வரவேற்போம் என்றும் அவர் மீண்டும் பரதன் ஆகி விடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே முதல்வர் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்னும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துணை முதல்வர் தனது இரண்டாவது மகனை சட்டமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று விருப்பப்படுவதாகவும், ஆனால் அவருடைய விருப்பத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுவதால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது