ரூ.621 கோடி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்: தேர்தல் ஆணையர்

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசிடம் தேர்தல் நடத்த ரூபாய் 621 கோடி கேட்டு உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு உருவாகி 621 கோடி செலவாகும் என்றும் இது கொரோனா  காலம் என்பதால் கூடுதலாக செலவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் எனவே சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூபாய் 621 கோடி ரூபாய் கேட்டு இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 

election commission

ஆனால் அதே நேரத்தில் கொரோனா  என்பதால் தேர்தல் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் செலவுக்கான தொகை 621 கோடியை தமிழக அரசு எப்பொழுது தரும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது 

ஏப்ரல் மாதம் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான தொகையை ஒதுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தேர்தலை சந்திக்க தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ள நிலையில் தேர்தலுக்காக ரூபாய் 621 கோடி தேர்தல் ஆணையர் கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web